மீபத்தில் சென்னை மற்றும் சேலம் நகரில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகüல் சிறப்பான வெற்றிகளை பெற்று சிகரம் தொட்ட மதுரை சி. இ. ஓ. ஏ பள்ü மாணவர்களை சந்தித்தோம். அந்த கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் தமிழ் பேராசிரியர் முனைவர் இராசா கிளைமாக்சு, தலைவர் சாமி மற்றும் முதன்மை முதல்வர் செல்வி கலா மற்றும் முதல்வர்கள் திருமதி மஞ்சுளா, திருமதி கோடீஸ்வரி மற்றும் உடல் கல்வி இயக்குனர் செல்வ முருகன் ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்று நம்மிடம் பேச வந்தார்கள். வெற்றி பெற்ற மாணவர்கள் ஒன்று சேர கூறியது இதுதான். நாங்கள் பங்கு பெற்ற முதலமைச்சர் கோப்பை சிறப்பு விளையாட்டு போட்டிகüல் அனைத்து தெய்வங்கள் அருளையும் வேண்டி உறுதியான நம்பிக்கை, தைரியத்துடன் மதுரைக்கும் எங்கüன் கல்வி நிறுவனத்திற்கும் நற்பெயர், புகழை வாங்கித் தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு எங்களை விட வயதிலும், உடல் சக்தியிலும், அனுபவத்திலும் உயர்வு பெற்றிருந்த மாணவர் களை வெற்றி கண்டோம்.

Advertisment

அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறிவிட்டு, சிலம்பம் போட்டியில் முதல் பரிசு வென்ற பத்தாம் வகுப்பு மாணவன் கவின் சூரிய வரதனை சந்தித்து அவரின் வெற்றி அனுபவத்தை கேட்டோம். இளம் கன்று பயம் அறியாது என்ற அமைதியான முகபாவத்துடன் இருந்த அவர் தன்னைப்பற்றி, தனக்கு பயிற்சி தந்தவர் பற்றி தான் பெற்ற சிலம்பாட்ட வெற்றி பற்றி கூறினார். ‘எங்க தாத்தா சேகர் தமிழக அரசின் காவல்துறையில் 2005-ஆம் ஆண்டு வரை சட்டம் ஒழுங்கு கமிஷனராக நல்ல பெயர், புகழுடன் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். 

Advertisment

game1

அவர் மிகச்சிறந்த சிலம்பாட்ட வீரர். அதனால் எனக்கு ஐந்து வயது முதலே சிலம்பாட்டம் ஆட கற்றுக் கொடுக்க துவங்கி விட்டார். முக்கியமாக அவர் எம்.ஜி.ஆரின் சிலம்பாட்ட ரசிகர். எந்தெந்த படங்கüல் எம்.ஜி.ஆர் சிலம்பாட்டம் ஆடுகிறாரோ அத்தனை படங்களுக்கும் என்னையும் அழைத்துச் சென்று பார்... பார்.... அழகும் வீரமும் ஆற்றலும் நிறைந்த முறைப்படியான சிலம்பம் கற்ற எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரை பார்த்தாலே வீரம் வந்துவிடும், வேகம் பிறந்து விடும் என்று உணர்ச்சி பொங்க கூறுவார். நானும் அவரும் எம்ஜிஆரின் சிலம்பாட்ட காட்சிகüல் மெய் சிலிர்த்து மகிழ்வோம். அதனால் என் தாத்தா மற்றும் நானும் எம்ஜிஆரை பார்த்து தான் சிலம்பாட்டத்தில் வெற்றிகளை பெற்று வருகிறேன் என்பதை மிகுந்த பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். மதுரை கலை பண்பாட்டு துறையில் மணிகண்டன் என்பவரிடம் முறைப்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிலம்பு பயிற்சியும் பெற்று வருகிறேன். சென்னையில் நடந்த முதலமைச்சர் கோப்பை சிலம்பு போட்டியில் நான் மட்டுமே பத்தாம் வகுப்பு மாணவன். மற்றவர்கள் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள். இருப்பினும் நான் அசரவில்லை, என் தாத்தாவையும் எம்ஜிஆரையும் அனைத்து தெய்வங்களையும் மனதார வேண்டிக் கொண்டு முதல் சுற்றில் புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர் சிலம்பாட்ட மாணவர்களுடன் மோதி வெற்றி பெற்று பிறகு தேனி மாணவருடன் இறுதி ஆட்டத்தில் மோதி வெற்றி பெற்று ஒரு லட்ச ரூபாய் பரிசு பெற்றேன். இந்த வெற்றியை என் தாத்தாவிற்கும் சிலம்பு அரசன் எம்ஜிஆருக்கும் பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.நான் சமீபத்தில் பத்தரை மணி நேரம் தொடர்ந்து சிலம்பாடி சிலம்பு சுற்றி உலக சாதனை புரிந்து "நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்' சான்றிதழ் பெற்றுள்ளேன். "ரிக்ஷாக்காரன்' படத்தில் எம்.ஜி.ஆர் கிளைமாக்ஸ் காட்சியில் பம்பரம் போல் சுழன்று சுழன்று சுருள் சிலம்பம் ஆடுவார். அதனையும் கற்று வைத்துள்ளேன். தொடர்ந்து சர்வதேச அளவில் போட்டிகüல் பங்கேற்று வெற்றி பெறுவது என் லட்சியமாகும். தொழில் அதிபரான என் தந்தை பிரபு மற்றும் ஹவுஸ் வைஃப் ஆன என் தாய் மாலதி இருவருமே எனக்கு நல்ல ஆதரவு தந்து வருகிறார்கள், ஊக்கமüத்து வருகிறார்கள். எனவே சிலம்பாட்ட தொடரில் வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’.                 

games2

 அடுத்து இறகு பந்து என்ற பேட்மின்டன் போட்டியில் முதல் பரிசு 11-ஆம் வகுப்பு மாணவி ஏ. எஸ். அனுஷ்கா ஜெனிபரை சந்தித்து வெற்றி பற்றி கேட்டோம். அனுஷ்கா அசராமல் தந்த பதில் இது "எனக்கு இப்போது வயது 15. 10 வயது முதலே நான் பேட்மின்டன் விளையாட ஆர்வம் வந்து பயிற்சி பெற தொடங்கி விட்டேன்.மதுரை மேக்ஸ் பாயிண்ட் பேட்மின்டன் அகாடமியில் சரவணன், நவீன் இருவரிடம் பயிற்சி பெற்று வருகிறேன். எங்கள் பள்ü நிறுவனர் முனைவர் இராசா கிளைமாக்சுவின் ஊக்குவிப்பு, உற்சாக பேச்சு, நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற மன உறுதியை முதலிலேயே தந்து விட்டது. பள்ü நேரம் தவிர காலை, மாலை 10 மணி நேரம் கொஞ்சம் கூட சலிப்பு, தளர்ச்சி இல்லாமல் பேட்மின்டன் பயிற்சி செய்வேன். என்னுடன் போட்டிக்கு ஒற்றையர் பிரிவில் விளையாடியவர்கள் எல்லாருமே மிகவும் திறமையாக எனக்கு சவாலாக தான் விளையாடினார்கள். ஆனாலும் நான் மன உறுதியோடு விளையாடி வெற்றி பெற்று முதல் பரிசு ஒரு லட்சம் வென்றேன். தவிர எங்கள் பள்üயில் ஒன்பதாவது படிக்கும் சிவரஞ்சனா என்னுடன் பயிற்சி பெற்று இரட்டையர் பிரிவில் வென்று 50,000 ரூபாய் பரிசும் பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தோம். தொடர்ந்து தேசிய அளவில் போட்டிகüலும் பங்கேற்று வருகிறேன். பல வெற்றி கோப்பைகளை வென்று எங்கள் பள்üக்கும் மதுரைக்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பேன்'' என்றார்.       

Advertisment

இந்த இருவரை தவிர சேலத்தில் நடைபெற்ற இரட்டையர் முதலமைச்சர் கோப்பை கேரம் போட்டியில் ரூபாய் 50,000 பரிசு வென்ற இப்பள்ü மாணவர்கள் டி ஆகாஷ் மற்றும் வி. அபிநவ் கார்த்திக் இருவரையும் வாழ்த்தினோம். இது தவிர தமிழ்நாடு பள்üக் கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவரையும் மற்றும் நீச்சல் போட்டிகüல் வெற்றி பெற்ற இப்பள்ü மாணவர்களையும் மனமார பாராட்டி மென்மேலும் சிறப்பான விளையாட்டு வெற்றிகளை பெற்றிட வாழ்த்தி விடை பெற்றோம். இந்த வெற்றியாளர்களை பாராட்ட தொடர்பு கைபேசி எண்: 98420 33244

பேட்டி படங்கள்: ரியா ரவிசங்கர்